என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மனைவி கடத்தல்"
தக்கலை அருகே மருதூர் குறிச்சி கல்வெட்டான் குழியை சேர்ந்தவர் கென்ஸ் (வயது 35). இவர் கேரளாவில் காண்டிராக்டராக உள்ளார்.
இவரது மனைவி மிஸ்பா. இவர்களுக்கு சாயல், ஜெர் சித் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திபு, திபுவென வீட்டிற்குள் புகுந்தனர்.
வீட்டில் இருந்த மிஸ் பாவை கணவன் கண் எதிரிலேயே அந்த கும்பல் தூக்கிச் சென்றது. மனைவி மிஸ்பாவை தூக்கிச் செல்வதை பார்த்த கென்ஸ் தனது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றார். அப்போது அந்த கும்பல் கென்சை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தக்கலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மனைவியை 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கடத்திச் சென்று விட்டது. அந்த கும்பலிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும். கடத்திச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
புகார் மனு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன் கண் எதிரேயே மனைவி கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 38). அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (39). முருகன் மனைவி போதுமணியும் முருகவேல் மனைவி அபிராமியும் நட்பாக பழகி வந்தனர்.
இதனால் அபிராமி அடிக்கடி முருகன் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது முருகனுக்கும் அபிராமிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு கடந்த 1 வருடத்துக்கு முன்பு 2 பேரும் வெளியூர் சென்று விட்டனர். அதன் பிறகு அவர்களை ஊருக்கு அழைத்து வந்த பெரியவர்கள் சமாதானம் செய்து அவரவர் குடும்பத்துடன் வாழுமாறு அறிவுரை கூறினர். ஆனால் முருகவேல் தனது மனைவியை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
அதன் பிறகு முருகனுக்கும், முருகவேலுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் உன்னால்தான் என் குடும்பம் சீரழிந்து விட்டது என முருகனிடம் முருகவேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனின் கழுத்தை அறுத்தார். படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் முருகன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து முருகவேலை கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் கோகாக் அருகில் உள்ள முராகிபாவி கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் கொன்னாவர். இவரது மனைவி பார்வதி.
பசவராஜின் நண்பர் ரமேஷ் ஷாகாபூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். அவருடன் பார்வதியும் அதே ஓட்டலில் வேலை பார்த்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்தநிலையில் ரமேஷிடம் பார்வதி ரூ.500 கடன் வாங்கி இருந்தார். 2 மாதங்கள் ஆகியும் கடனை அவர் திருப்பித்தரவில்லை. இதனால் ரமேஷ் பார்வதியின் மனதை மாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார். கணவரிடம் சேர்ந்து வாழவிடாமல் தடுத்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பசவராஜ் இதுபற்றி போலீசில் புகார் செய்ய வந்தார். அவர் தனது மனைவியை நண்பர் ரூ.500 கடனுக்காக கடத்திச் சென்றதாக போலீசாரிடம் கூறினார். இவரது விசித்திரமான புகாரால் போலீசார் ஆச்சரியம் அடைந்தனர்.
ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராததால் பசவராஜ் அங்குள்ள துணை கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்தனர். ஆனாலும் அவரது புகாரை போலீசார் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் பசவராஜ் போலீஸ் மீது நம்பிக்கை இழந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். #DebtIssues #WomenAbducted
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள தருமத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 35). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மாமா மகள் சுதா (28) என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
திருப்பூரில் வேலை பார்த்து வரும் ராஜேஷ்குமார் மாதத்துக்கு சில நாட்கள் மட்டும் சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் சுதாவுக்கும் அதே பகுதியில் சோப்பு கம்பெனி நடத்தி வந்த ராஜேஷ் என்ற வாலிபருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் வீட்டுக்கு தெரியவரவே சுதாவை கண்டித்துள்ளனர்.
இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் ஊரை விட்டு சென்று விட்டனர்.
தனது மனைவியை கடத்திச் சென்று விட்டதாகவும், அவரை மீட்டுத் தர கோரி ராஜேஷ்குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்